Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சியில் போட்டியிருக்கிற அம்பாறை மாவட்ட வேட்பாளர் வைத்தியக் கலாநிதி திலக ராஜபக்ஸவை ஆதரிக்கப் போவதாக, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி தெரிவித்தார்.
வேட்பாளர் திலக ராஜபக்ஸவை ஆதரித்து, திருக்கோவில், விநாயகபுரத்தில் எஸ்.புவனேஸ்வரியின் இல்லத்தில் இன்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, மேற்படி தீர்மானத்தை அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடிப் பிரதிநிதியாகப் போட்டியிடுகின்ற திலக் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் பொருத்தமான உரிய தீர்வுகளை அடைய முடியுமென, தமது சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக, புவனேஸ்வரி, ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
3 minute ago
13 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
15 minute ago