அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 நவம்பர் 21 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அளவை, நிறுவையில் மோசடி செய்வது இஸ்லாத்தின் பார்வையில் பெரும்பாவமும் தண்டனைக்குரிய குற்றமுமாகுமென, மௌலவி ரி.ஆர்.நௌபர் அமீன் தெரிவித்தார்.
கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த வருடாந்த மீலாதுன் நபி விழா, சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன் தலைமையில், சந்தை கட்டடத் தொகுதியில் நேற்று (20) நடைபெற்றது.
இதில் மார்க்க சொற்பொழிவாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையிர், வியாபாரத்தில் நீதி, நியாயமாக நடந்து கொள்ளுமாறு அல்குர்ஆனும் முஹம்மத் நபி (ஸல்) எச்சரித்துள்ளார் என்றும் வியாபாரத்தில் மோசடி செய்து உழைக்கும் பொருளாதாரம் ஹராமெனவும் அதனால்தான் இஸ்லாம் அதற்குத் தடை விதிப்பதாகவும் தெரிவித்தார்.
அளவை, நிறுவையில் மோசடி எதுவும் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கமும் தராசுகளைப் பரிசோதிக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சத்தார், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, சந்தை வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ.பி.ஜமால்தீன், செயலாளர் ஏ.எல்.கபீர், மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இன்ஸாட் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026