Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர், 'மாவா' எனப்படும் போதைவஸ்த்துக்கு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனரென, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.
தேசிய ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பில் நேற்று நடத்தப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் வளவாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“தீயவர்கள் சிலர், மாணவர்களுக்கு இதனை இலவசமாக வழங்கி, தமது துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இதற்கு அடிமையாகின்ற மாணவர்கள் தொடர்ந்தும் அவற்றைக் காசு கொடுத்து வாங்கி நுகர்கின்றனர். மாணவிகள் கூட இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர். இத்தகைய சமூக விரோதச் செயல்களை எவரும் அனுமதிக்கக் கூடாது. எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
04 Jul 2025