Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் அறுகம்பை பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி, இன்று வெள்ளிக்ழமை (12) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில், பொத்துவில் பிரதேச மீனவர் அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள், அம்பாறை மாவட்ட மீனவர் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொத்துவில் பிரதேசத்தின் பிரதான தொழிற்றுறையாக இருந்து வரும் கடற்றொழில் துறையில், பல்லாண்டுகாலமாக பல்வேறு பிரச்சிகைளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்தும் அவற்றை நல்லாட்சி அரசாங்கம் தீர்த்து வைக்குமாறு கோரியுமே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் அறுகம்பை மற்றும் உல்லை கடற்கரை பிரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் இல்லாமை, மீன்பிடி துறைமுகமொன்று அமைத்து வழங்காமை, இப்பிரதேசங்களில் சுற்றுலாத்துறைப் பயணிகள் நடமாடி வருவதால், மீன்பிடித் தொழிலுக்கு இடையூறு ஏற்படுகின்றமை மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல் போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டு இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் கடற்றொழிலாளர்களுக்கு மின்பிடி துறைமுகம் அமைத்துத்தருவதாக கூறப்பட்டு வந்த இடத்தை கரையோரம் பேணல் பாதுகாப்புத் திணைக்களம் அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேற்படி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், கடற்றொழில் அமைச்சுக்கும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கான மகஜரை, பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸாரத்திடம் கையளித்து வைத்தனர்.
மேற்படி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்படி அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என பிரதேச செயலாளர் இதன் போது உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025