Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் மின் தாக்குதலுக்குள்ளான அலுமினியம் பொருத்தும் தொழிலாளி ஒருவர் ஆபத்தான நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பத்தாம் பிரிவைச் சேர்ந்த ஆர்.றிப்காண் (வயது 22) என்பவரே சனிக்கிழமை (02) இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்படி பிரதேசத்திலுள்ள மாடி வீடொன்றின் இரண்டாவது மாடியில் அலுமினியம் பொருத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர், அம்மாடியில் நின்றவாறு அலுமினியக் கம்பிகளை கீழிருந்து வாங்கிக்கொண்டிருந்தார். இதன்போது, அங்கு காணப்பட்ட மின்சாரக் கம்பியில் அலுமினியக் கம்பி பட்டபோதே இவர் மின் தாக்குதலுக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
உடனடியாக ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago