2025 மே 19, திங்கட்கிழமை

முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் மீது இனந்தெரியாத குழுவினர் செவ்வாய்க்கிழமை (23) மாலை மேற்கொண்ட தாக்குதலில்; காயமடைந்த அவர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் காணப்பட்ட இக்குழுவினர், பொத்துவில் முர்சானா வீதிச் சந்தியில் நின்றதுடன்,  வீதியால் சென்றுகொண்டிருந்த முன்னாள் தவிசாளரையும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.  

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம்  முன்னாள் தவிசாளர் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற  பொலிஸாரின் ஜீப் வண்டி மீது இக்குழுவினர் கல்லால் எறிந்து தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இக்குழுவைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன், ஏனையோரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X