2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மின்விளக்கு பொருத்த நடவடிக்கை

Niroshini   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் அறுகம்பை பாலத்தில் மின்விளக்கு பொருத்துவதற்கு முதற்கட்டமாக 05 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எல்.எம். இர்பான் இன்று புதன்கிழமை (26) தெரிவித்தார்.

கடந்த சுனாமி அனாத்தத்தின் போது பாதிக்கப்பட்ட இப்பாலம் சீனா நாட்டின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு பாலத்துக்கான மின் கம்பங்கள் பொருத்தப்பட்டும் இதுவரையும்  மின்விளக்கு பொருத்தப்படாமையினால் அப்பிரதேசம் இருளில் மூழ்கியுள்ளது.

இதனால் பொதுமக்களும், உல்லாசப் பிரயாணிகளும் பல அசௌகரிகங்களை எதிர்கொள்வதாகவும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அறுகம்பை பாலத்துக்கு மின்விளக்கு பொருத்துவதற்கான அனுமதி உள்ளுராட்சி மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அறுகம்பை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்கள் உயரமாக உள்ளதால் மின்குமிழைப் பொருத்த உயரமான வாகனம் தேவைப்படுவதாகவும், இதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாகனம் கிடைக்கப்பெற்றதும் மின்விளக்கு பொருத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .