Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள சில காணிகளில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதற்குப் பிரதேச செயலகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், இன்று (7) தெரிவித்தார்.
மேற்படி காணிகளின் உத்தரவுப்பத்திரங்கள் மற்றும் அக்காணிகள் தொடர்பான ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
ஆகவே, மாகாணக் காணி ஆணையாளரின் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் அக்காணிகளில் கட்டடம் அமைப்பது உள்ளிட்ட எந்தவித அபிவிருத்தி வேலைகளிலும் ஈடுபட வேண்டாம் என்பதுடன், அக்காணிகளுக்குள் நுழைய வேண்டாம் எனவும் அக்காணிகளின் உரிமையாளர்களுக்குக் கடிதம் மூலம் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாகாணக் காணி ஆணையாளரின் பணிப்புரைக்கு அமையவே இது தொடர்பில் மேற்படி காணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago