Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா,ஏ.எல்.எம்.சினாஸ்,
முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்து தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றதுடன், பிரகடனமும் முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள யுத்தக் குற்ற விசாரணையை 1985ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டுமென்பதே எமது பிரகடனத்தின் முக்கிய நோக்கம்;. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தையும் உள்வாங்கவேண்டும்.
வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா. விசாரணை செய்ய வேண்டுமென்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தவேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும்.
வடபகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவை துரிதமாக அமைக்க வேண்டும்.
வடமாகாணத்தில் வனப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
'வடமாகாணசபையே ஏன் முஸ்லிம்கள் விடயத்தில் மௌனம்?', 'ஐக்கிய நாடுகள் சபையே ஏன் பாரபட்சம்?' 'முஸ்லிம் அரசியல் தலைமைகளே ஒன்றுபட்டு ஒன்றைச் சொல்லுங்கள்', 'முஸ்லிம்களை இருண்ட யுகத்துக்கு மீண்டும் தள்ளிவிடாதே', 'மத வன்முறையினால் பாதிக்கப்பட்ட அளுத்கம முஸ்லிம்களுக்கான நியாயாம் எப்போது?' போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவண்ணம் இவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
8 hours ago