2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரூ.1.1 மில்லியன் நிவாரண உதவி வழங்கிவைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர்நிலை காரணமாக, இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு, கல்முனையன்ஸ் போரத்தினால் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 265 குடும்பங்களுக்கு  இரண்டாம் கட்டமாக தலா 1,500 ரூபாய் பெறுமதியான உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவ் உணவுப்பொதியில் அரிசி, பேரிச்சம்பழம், ரிங்க்ஸ் பவுடர், சீனி, கோதுமை மா, நெத்தலி, தேங்காய் உட்பட இன்னும் பல அத்தியவசிய பொருள்கள் உள்ளடக்கப்பட்டன. 

முதல் மற்றும் இரண்டாம் கட்ட உணவுப்பொதி விநியோகத்துக்காகவும்  நிதியாகவும் மொத்தமாக 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொகை கொவிட்-19 இடர்நிலை காரணமாக, இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  இதுவரையும் கல்முனையன்ஸ் போரத்தால் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .