2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ரூ. 200 இலஞ்சம் வாங்கிய பொறுப்பதிகாரி கைது

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கல்முனை தனியார் பஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பஸ் சாரதி ஒருவரிடம் 200 ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த பொறுப்பதிகாரி, பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இல்லாது போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுதற்கு பஸ் சராதிகளிடம் தொடர்ச்சியாக இலஞ்சம் வாங்கிவருவதாக இலஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நடத்துநருக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய, சம்பவதினமான நேற்றுக் காலை 11.30 மணிக்கு சாரதியிடம்  200 ரூபாய் இலஞ்சமாக பஸ் நிலையப் பொறுப்பதிகாரி வாங்கியபோது, அங்கு மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஓழிப்புப் பிரிவினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். 

இதில் கைதுசெய்யப்பட்ட அவரை, கொழும்புக்கு அழைத்துச் சென்று, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X