Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்
மிக நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் எஸ். டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று (29) இடம்பெற்றது.
வட்டமடு விவசாயிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாக முன்வைத்ததுடன் அதற்கான தீர்வை அவசரமாக எடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
சம காலத்தில் உள்ள நெருக்கடி நிலையில் விவசாயிகள் படும் கஷ்டநிலை, உரப் பிரச்சினைகள் உட்பட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைப் பெற வேண்டும் என்பதில் தான் உடன்பாட்டுடன் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி துரிதகதியில் எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்தார்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜீ. எம். அன்வர் நௌசாத் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
6 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
24 minute ago