2026 மே 06, புதன்கிழமை

வித்யா படுகொலை: நால்வரின் மரண தண்டனையை உறுதி

Editorial   / 2026 மே 06 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (06) அன்று உறுதி செய்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்ட இந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி, பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய இரண்டு பிரதிவாதிகளின் தண்டனையிலிருந்து அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .