2026 மே 06, புதன்கிழமை

“விஜய் கச்சத்தீவை கேட்பார்”

Janu   / 2026 மே 06 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைப்பட நடிகர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகம், தற்போது இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீண்டும் கோருவதற்கு வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: "மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் முயற்சியாலேயே இலங்கைக்குக் கச்சத்தீவு கிடைத்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் அதனை கோர வாய்ப்புள்ளதால் இலங்கை அதனை இழக்க நேரிடலாம். அத்துடன், தற்போதைய இலங்கை அரசாங்கம் அதனை விட்டுக்கொடுக்கவும் கூடும்," என்றார்.

தொடர்ந்து டிஜிட்டல் அடையாள அட்டை விவகாரம் குறித்துப் பேசிய அவர்: "இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் ஒப்பந்தம், 'மெட்ராஸ் செக்யூரிட்டீஸ்' (Madras Securities) என்ற தென்னிந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையர்களின் உயிரியல் அளவீட்டுத் தரவுகள் (Biometrics) அனைத்தும் அந்த நிறுவனத்திடம் சென்றுவிடும். முன்னைய அரசாங்கம் இதனைத் தொடங்கியபோது எதிர்த்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது கேள்விப்பத்திரங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். 1970-களில் இந்திய விரிவாக்கம் குறித்து விரிவுரைகளை நடத்தியவர்களே இன்று இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்," எனக் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, ஜோசப் விஜயின் தேர்தல் வெற்றியை சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .