Janu / 2026 மே 06 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு அண்மைக் காலமாக விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகியோர்; கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எனப் பலரைச் சந்தித்து, மாகாண நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் நிலவும் நில உரிமை மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான விசேட சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (06) திருகோணமலையில் உள்ள ‘Trinco Blu’ ஹோட்டலில் நடைபெற்றது.
‘விருத்தி’ வலையமைப்பின் (Viruththy Network) ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இச்சந்திப்பில், திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள், கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் நிலங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது, திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்புகள், காணி விவகாரங்களில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் இறுதியில், அரச தரப்பினரால் மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி, கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரால் உயர்ஸ்தானிகர்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்கான காணிகளை விடுவித்துத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை, வடக்கு - கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதி ஒருங்கிணைப்பாளர் அழகுராசன் மதன் ஆகியோர் இணைந்து, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வேண்டுதல்களை உள்ளடக்கிய மற்றுமொரு மகஜரையும் கையளித்தனர்.
மேற்படி விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாட முனைவதாக உயர்ஸ்தானிகர்கள் இதன்போது தெரிவித்தனர்.


35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago