Janu / 2026 மே 06 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை ஆர்.கே. நகரில் உறவினர் வீட்டிற்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வட்டச் செயலாளர் தினேஷ் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த தினேஷ் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகச் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்திருந்த சிறுமி, பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துத் தனது உறவினர்களிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, தவெக வட்டச் செயலாளர் தினேஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago