2026 மே 07, வியாழக்கிழமை

’தொப்பியை போட்டுக்கொள்ளட்டும்’

Freelancer   / 2026 மே 07 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

"காவத்தை, நீலகாமம் தோட்டச் சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் எவ்விடத்திலும் கூறவில்லை; ஆனால், அந்தத் தொப்பி அளவாக இருந்தால் அரசாங்கம் அதனைப் போட்டுக்கொள்ளலாம்," என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) அன்று நடைபெற்ற 'மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம்' மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,

 "நீலகாமம் தோட்டச் சம்பவத்தை அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தி மனோ கணேசன் அரசியல்மயப்படுத்த முயற்சிப்பதாகக்" குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:

"இரத்தினபுரி மாவட்டம், காவத்தை பகுதியில் உள்ள தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஒரு பொய்யைக் கூறினார். அதனைக் கண்டித்தே நான் உரையாற்றினேன்."


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .