Gavitha / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய விசேட கவனம் எடுக்கப்படுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை நகரத்துக்கு சனிக்கிழமை (12) விஜயம் செய்த போதே இவர் இதனைத் தெரிவித்தானர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 30 வருட யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை நிவர்த்தி செய்ய எமது விளையாட்டுத்துறை அமைச்சினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் இம்மாகாணங்களிலுள்ள முக்கிய நகரங்களில் உள்ளக விளையாட்டுக் கட்டடத் தொகுதிகள், உள்ளக அரங்குகள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியான மைதானங்களையும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தின் சகல ஊர்களுக்குமான மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன், விளையாட்டுக் கழகங்களும் கட்டியெழுப்பப்படும்.
இளைஞர், யுவதிகளின் ஆளுமைகளை விருத்தி செய்து நாட்டின் விளையாட்டுத்துறைக்கு அவர்களின் பங்களிப்பினை உச்ச அளவில் பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.
விளையாட்டின் மூலம் எமது நாட்டின் புகழை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லக்கூடிய அனைத்து வேலைத்திட்டங்களையும் விளையாட்டுத்துறை அமைச்சரும் எனது பல்கலைக்கழக நண்பருமான தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago