2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வர்த்தக நிலையங்கள் கைமாறினால் அறிவிக்க வேண்டும்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், ஏற்கெனவே வர்த்தக நிலையங்கள், கடைகள் வைத்திருந்து, தற்போது எவையேனும் மூடப்பட்டிருந்தால் அல்லது கைமாறப்பட்டிருந்தால் அது குறித்துத் தமக்கு அறிவிக்க வேண்டுமென, கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

2020 ஜனவரி 03ஆம் திகதிக்கு முன்னதாக, கிராம சேவகர் ஊடாக, மாநகர சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதுவரை வர்த்தக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளாத வர்த்தக நிலையங்கள், கடைகளின் உரிமையாளர்கள் மீதும் வியாபார அனுமதிப்பத்திரத்தை பெற்றும் அதனைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

மேலும், வியாபார அனுமதிப்பத்திரம் காட்சிப்படுத்தப்படாத வர்த்தக நிலையங்கள், கடைகள் தொடர்பில் 0761405460 அல்லது 0760103680 எனும் அலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும், பொதுமக்களை மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X