2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வர்த்தக நிலையம் தீ வைப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். ஜமால்டீன்

அக்கரைப்பற்றுப் பிரதான வீதியில் அமைந்துள்ள அலைபேசி திருத்துதல் மற்றும் மீள்நிரப்பு அட்டை விற்பனை செய்யும் வர்த்த நிலையம், இன்று சனிக்கிழமை (12) அதிகாலை இனந்தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வர்த்தக நிலையத்தின் கதவுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தீயினால் வர்த்தக நிலையத்துக்குள் இருந்த கணினி மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதாக வர்த்தக நிலையத்துக்கு அருகிலுள்ள வீட்டின் உரிமையாளரால் வர்த்தக நிலைய உரிமையாளருக்குத் தெரியவந்ததையடுத்து, பொலிஸ் அவசர சேவைப் பிரிவு மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர், இன்று பிற்பகல் 1.30க்கு சம்பவ இடத்துக்கு வருகை தந்து வர்த்தக நிலையத்தைத் திறந்து உள்ளே சென்று பார்வையிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X