2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வளாக இலக்கம் பொறிக்கப்பட்ட அட்டை விநியோகம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மின்பொறியலாளர் பிரிவுக்குட்பட்ட மின் பாவனையாளர்கள் மின்தடங்கள் தொடர்பாக 026-2054444 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மின்தடங்களை மிக விரைவாக நிவர்த்தி செய்வதற்கு இலங்கை மின்சார சபையினால் புதிதாக நாடு தழுவிய ரீதியில் கணினி மயப்படுத்தப்பட்ட வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க,மின்தடங்கல்கள் வாடிக்கையாளர் சேவைக்கு 1987 அல்லது மாகாண ரீதியாக வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மின்தடை தொடர்பாக மின்பாவனையாளர்களுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள வளாக இலக்கத்தினை குறிப்பிட்டு அறிவிக்க முடியும்.

இந்த முறைப்பாடு குறித்து பிரதேசத்திலுள்ள மின்சார சபையின் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கணினி மூலம் தகவல் வழங்கப்படும். இதன் அடிப்படையில் உடனடியாக மின்தடை சீர் செய்யப்படும் என்றார்.

மேலும்,இது தொடர்பாக மின் பாவனையாளர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள வளாக இலக்கம் பொறிக்கப்பட்ட அட்டை விநியோகிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X