எஸ்.கார்த்திகேசு / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை – பொத்துவில், லாகுகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உலக வங்கியின் நிதி உதவியின் ஊடாக வானிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ் வேலைத்திட்டம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், விவசாய அமைப்புகளுக்குத் தொளிவூட்டும் செயலமர்வு, பொத்துவில் பிரதேச செயலகத்தில் இன்று (02) நடைபெற்றது.
இவ் தொளிவூட்டல் நிகழ்வு, பொத்துவில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ் தலைமையில் நடைபெற்றதுடன், மாகாண விவசாயப் பணிப்பாளர் டொக்டர் ஆரியதாச கலந்துகொண்டார்.
இலங்கையில் வானிலை ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கை என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் வாழும் விவசாய சமூகங்கள் அல்லது குடும்பங்களின் தாங்கு திறனை முன்னேற்றி, விவசாயிகளின் நீர்ப்பாசன விவசாய வினைத்திரனை மேம்படுத்தும் வகையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், விவசாய உற்பத்தி, சந்தைப்படுத்தலுக்காக உலக வங்கி சுமார் 42 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியுள்ளன.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025