2025 மே 12, திங்கட்கிழமை

‘விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பது உன்னத சேவை’

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பது,  சமூகத்துக்கு ஆசிரியர்கள் செய்யும்  உன்னத சேவையாகுமென, நவஜீவன அமைப்பின் செயற்றிட்ட முகாமையாளர் டி.ஆர்.சி. முதித்த குமார தெரிவித்தார்.

இலங்கையின் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகளின் சமூக சேவைகளை அணுகுதல், உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடைதல் எனும் வேலைத்திட்டத்துக்கு அமைவாக நவஜீவ அமைப்பால் நடத்தப்பட்டு வந்த விசேட கல்வி ஆசிரியர்களுக்கான 05 நாள் வதிவிட செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு, ஒலுவில் கிறீன் விலா வரவேற்பு மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.எல்.ஹபீபுள்ளாஹ், கோட்டக் கல்விஅதிகாரி எம்.ஏ.றசூல், ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.சியாம், எஸ்.எம்.லாஹிர் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு, விசேட கல்வி ஆசிரியர்களுக்கு செயன்முறையூடாகப் பயிற்சியளித்தனர்.

இதில் கல்முனை, சம்மாந்துறை வலயங்களில் கடமையாற்றும் விசேட கல்வி ஆசிரியர்கள் 30 பேர் பங்குபற்றினர்.

நவஜீவன அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.டி.பத்ம கைலநாதன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன், விசேட கல்வி இணைப்பாளர் ஏ.எம்.எச்.பியூமியி இரேஸா ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X