Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை - வைத்தியசாலை வீதி, புத்தங்கல பகுதியிலுள்ள ஹொட்டல் ஒன்றில் நீண்ட காலமாக இயங்கி வந்த விபசார விடுதியிலிருந்து கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவருக்கு, அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட நீதவானுமாகிய ஏ.ஜ.கெட்டிவத்த, அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
விடுதியை முகாமைத்துவம் செய்து நடத்தி வந்த பெண்ணுக்கும் அவ் விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணுக்குமே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்குதல் செய்ததையடுத்து, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (03) ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டபோது, விடுதி முகாமையாளரான பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு நீதி சட்டத்தில் இருக்கும் அதிகூடிய அபராதப் பணமாக இரண்டு இலட்சம் ரூபாயும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு 100 ரூபாயும் அபதாரமாக செலுத்துமாறு, நீதவான் தீர்ப்பளித்தார்.
9 minute ago
13 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
16 minute ago