Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில், இன்று அதிகாலை (12) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று, நாவற்குடாவைச் சேர்ந்த 26 வயதுடைய ரவிச்சந்திரன் ரனுர்ஜன் எனும் இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் எனவும் சு.அஜித்குமார் எனும் இளைஞன் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய வளையில் வைத்து மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் உள்ள வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வியத்தைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேற்படி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .