எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஒக்டோபர் 20 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் குஞ்சான்ஓடை பாலத்திற்கு அருகில் இன்று (20) காலை 06.00 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஸ்தலத்தில் பலியாகியுள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில், ஊரனி கனகர் கிராமத்தைச் சேர்ந்த, திருச்செல்வம் ஜினிஜன் (வயது-19) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான, மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026