Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில், எதிர்வரும் (16) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தெரிவித்தார்.
மேற்குறித்த சபை அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு, செயலாளரால் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர், அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தி, அற்றைத் தீர்க்கும் பொருட்டு, இந்த அமர்வின் போது கலந்துரையாடவுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தினம் நடைபெறவுள்ள அமர்வின் போது, கடந்த மாதக் கூட்டறிக்கைகளுக்கு அங்கிகாரம் பெறல், செலவீனங்களுக்கு அங்கிகாரம் பெறல் எனப் பல விடயங்கள், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள், முறைப்பாடுகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள் தொடர்பாகவும், குறித்த அமர்வின் போது ஆராயப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
3 hours ago