Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்கள ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் சாதனை ஈட்டிய மாணவர்கள் மற்றும் தேசிய மட்டத்தில் விருதுகள் பெற்ற 75 மாணவர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த விருது வழங்கல் நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒவ்வொரு பிள்ளைகளும் ஏதோ ஒரு விசேட திறமை உடைய வர்களாகவே இருக்கிறார்கள். விளையாட்டு, கலை, கலாசாரம் போன்ற பல துறைகளில் விசேட திறமைப் பெற்றவர்கள்.
அவர்களுடைய திறமைகளைச் சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுடைய பாதையில் செல்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்தினால் தலை சிறந்த மனிதர்களாக எதிர்கால தலைவர்களாக ஆக்க முடியும். திறமையான சாதனையாளர்களை வெளி உலகிற்கு கொண்டுவருவதே இந்நிகழ்வின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
13 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago