2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வீடுகளில் கொள்ளை; இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன்

திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக வீடுகளை உடைத்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 18, 19 வயது இளைஞர்கள் இருவரை, 2021 ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

அண்மையில் திருக்கோவில் பிரதேசத்தில் இரு வீடுகளை உடைத்து ஒரு வீட்டிலிருந்து  60 ஆயிரம் ரூபாள் பெறுமதியான தங்க நகையும் 27 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றைய வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகையும் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையில், சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.  

இதில் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபாய் தங்க நகையும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டதுடன், கைது செய்த இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (27) ஆஜர்படுத்தியபோது, அவர்களை 2021 ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டர்;

இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் ஒருவர் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .