ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று, 01ஆம் பிரிவு, யூனியன் வீதியில் அமைந்துள்ள அஹமட் முகைதீன் அஹமட் றஸ்மி என்பவரது வீட்டின் மீது, இனந்தெரியாதவர்களால், இன்று (10) அதிகாலை தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக, அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலால் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த உபகரணங்களும் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வீட்டின் மீது, செப்டெம்பர் 3ஆம் திகதியும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது தொடர்பிலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளர், கடந்த காலங்களில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துவந்துள்ளதுடன், அரசியல் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள், நேர்காணல்கள்களை, இணையத்தளங்களில் பதிவேற்றி வந்துள்ளார் எனவும் அவர் தற்போது வெளிநாட்டில் தொழில்புரிந்து வருகின்றார் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago