Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு, நகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், விசேட அறிவுறுத்தல் ஒன்றை இன்று (27) விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில்கள், படிகள், அவ்வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதானது வீதிகளின் அகலத்தைக் குறைத்திருப்பதுடன், போக்குவரத்துக்கும் பெரும் சிரமமாகவிருப்பதாகவும், இந்தச் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில், கல்முனை மாநகர சபைக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இச்சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்போர், அப்படிகளை தாமாகவே அகற்றி, வீதிப் போக்குவரத்துகளில் ஏற்பட்டுள்ள இடைஞ்சல்களையும் விபத்துகளையும் தவிர்ந்துக்கொள்வதற்கு உதவுமாறு, மாநகர முதல்வர் என்ற ரீதியில் அன்புடன் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக கல்முனை மாநகர சபையால், சம்பந்தப்பட்டோருக்கு ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனைத் தவறும் பட்சத்தில் மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட ஏற்பாடுகளின் கீழ், சம்மந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த கட்டுமானங்கள் மாநகர சபையால் அகற்றப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், அதற்கான செலவுகள், வழக்குச் செலவுகள் என்பவற்றுடன், அபராதமும் அறவிட வேண்டியேற்படும் என்பதை மனவருத்தத்துடன், அறியத்தருகின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago