2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வெடிமருந்து தயாரிப்பில் ; தம்பதி படுகாயம்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடிமருந்து தயாரித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம், அம்பாறை - அளிக்கம்பை பிரதேசத்திலுள்ள வீட்டில் நேற்று (17) பிற்பகல் 4.30க்கு இடம்பெற்றுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அளிக்கம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது மனைவியான 62 வயதுடைய வெங்கட்மேரி என்பவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செலயகப் பிரிவிலுள்ள மேற்படிக் கிராமத்தில் இரவு வேளைகளில், யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் கிராமத்துக்குள் ஊடுருவி, பயிர்ச் செய்கைகளை நாசப்படுத்தி வருவது வழமை.

இந்நிலையில்,  பன்றிக்கு வெடி வைப்பதற்காக, யானை வெடிகளைப் பிரித்து, அதிலுள்ள மருந்துகளை சேர்த்து வீட்டிலேயே வெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த வெடிமருந்து தவறுதலாக வெடித்துள்ளது. இதில் கணவன் – மனைவி படுகாயமடைந்தனர்.

இதேவேளை, படுகாயமடைந்தவர்களை, ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு பனங்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது என வைத்தியர் தெரிவித்த நிலையில், வைத்தியர் மீது,  ஓட்டோ சாரதி தாக்க முற்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

- கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .