Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 22 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீகே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்
பட்டதாரிகளுக்கு பயிலுநர் பட்டதாரி நியமனம் வழங்கும் செயற்றிட்டத்தில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்த பட்டதாரிகளுக்கு நியனக் கடிதம் வழங்கப்பட்டும் அது இடைநிறுத்தப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்மை கண்டிக்கத்தக்க விடயமாகுமென இலங்கை வெளிநாட்டுப் பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்தது.
மேற்படி ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற போது, ஒன்றியத்தின் பிரதித் தலைவர் ஏ.ஜி. கபீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “இலங்கை அரசாங்கத்கத்தால் பட்டதாரி பயிலுநர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில், இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்று பட்டம் பெற்றிருந்த 3,747 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்து, அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்ட பின்னர், அவை அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
“கடந்த காலங்களில், உள்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்ததென அனைத்துப் பட்டதாரிகளுக்கும் வேறுபாடின்றி அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்பட்டுவந்துள்ளன.
“அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அனைத்துத் தகைமைகளையும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள் கொண்டுள்ள போதிலும் தற்போதயை அரசாங்கத்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை பாரிய அநீதியாகும்.
“எனவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழக இலங்கைப் பட்டதாரிகளுக்கும் அரச சேவையில் நியமனம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபாக்ஷ ஆகியோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எமது ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது” என்றார்.
11 minute ago
15 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
59 minute ago