Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 7147 குடும்பங்களைச் சேர்ந்த 25,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு மரணமடைந்தள்ளாரெனவும் தெரிவித்த அம்பாறை மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ்,இரு வீடுகள் முழுமையாகவும் 127 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வெள்ளம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துகுட்பட்ட பிரிவுகளில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.
32 குடும்பங்களைச் சேர்ந்த 96பேரே இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளதுடன் 1120 குடும்பங்களைச் சேர்ந்த 3,920பேர் பாதிக்கப்ப ட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டதுடன் ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியப் பணிமனையின் வைத்தியர்கள் மருந்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
கோவில்கள், பாடசாலைகள், வீதிகள், குடியிருப்புக்கள் எனப் பல்வேறு பகுதிகளும் தொடர்ந்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களதும் பொதுமக்களினதும் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மீனவர்களும் தொழிலின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஜானக ஹந்துவாபெத்த உள்ளிட்ட
அதிகாரிகள் ஆலையடிவேம்பில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் நேரில் பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025