Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 24 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களை அண்மைக்காலமாக திருடிவந்த ஒருவரை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை – சம்மாந்துறை, புதுப்பள்ளி பகுதியில் வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள் களவாடப்படுவதாக, ஒரு மாதத்துக்கு முன்னரே சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்துக்கு முறையிடப்பட்டுள்ளது.
இதன்படி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் ஒரு மாதகாலமாக புலன்விசாரணையின் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில், களவாடப்பட்ட 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள், சம்மாந்துறை நகரப்பகுதியிலுள்ள இரும்புக் கடையொன்றில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (22) மீட்கப்பட்டன.
இயந்திர உதிரிப்பாகங்களை களவாடி, குறித்த இரும்புக்கடைக்கு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது சந்தேகநபரொருவர், நேற்று (23) கைதாகியுள்ளார்.
கைதான நபர், சம்மாந்துறை வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றிய நிலையில், ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்றும் தற்போது ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.
இந்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணை செய்து வரும் பொலிஸார், சந்தேகநபரை, தடயப்பொருள்கள் சகிதம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நாளை மறுதினம் (26) பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago