Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 08 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்போக நெற்செய்கை அறுவடையின் பின்னர் நெற்செய்கை காணிகளில் காணப்படும் வைக்கோலை எரிக்க வேண்டாமென, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், இன்று (08) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான வயல்வெளிகளில் அறுவடையின் பின்னர் மீதமாய் கிடைக்கக் கூடிய வைக்கோலை எரிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் வைக்கோலை நிலத்தில் இடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பாக விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் ரீதியாக விழிப்புணர்வு மற்றும் பொது அறிவித்தல் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இதனை மீறி மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் வைக்கோலை எரிப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வைக்கோலை எரிக்காமல் வயலில் ஓர் இடத்தில் சேமித்து வைத்து மண்ணுடன் கலந்து சேதனைப் பசளையாக பயன்படுத்தால் கூடுதலான விளைச்சலைப் பெற முடியும்” என அறிவித்துள்ளார்.
வைக்கோலை மண்ணுடன் சேர்ப்பதன் மூலம் மண்ணின் இரசாயன இயல்புகள், மண்ணின் பௌதீக இயல்புகள், உயிரியல் தன்மைகள் என்பன விருத்தியடைகின்றன. எனவே, வைக்கோலை எரிக்காமல் சேமித்து வைத்து சேதனப் பசளையாக பயன்படுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
51 minute ago
1 hours ago