2025 மே 12, திங்கட்கிழமை

வைத்தியசாலையில் ஆரோக்கியமான உணவகம் திறப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்புப் பிரிவினரால் "தொற்றா நோய்த் தடுப்புக் குடிசை" எனும் ஆரோக்கியமான உணவகசாலை அங்குரார்ப்பண நிகழ்வு, வைத்தியசாலை அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரகுமான் தலைமையில், வைத்தியசாலையின் வளாகத்தில் நேற்று (09) நடைபெற்றது.

தொற்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவுகளை, மக்கள் மத்தியில் கொண்டுசென்று, அதனை நடைமுறைபடுத்தும் நோக்குடன், ஆரோக்கியமான உணவு தொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில், ஆரோக்கியமான உணவுகள் கொண்ட உணவுச்சாலையை வைத்தியசாலையில் நிறுவியுள்ளதாக, வைத்தியசாலைஅத்தியட்சகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள்வைத்தியசாலையின் ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X