2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வைர விழா கண்காட்சி நிகழ்வு

வி.சுகிர்தகுமார்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு நிறைவின் வைர விழாவையொட்டிய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு, பாடசாலை மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் ச.ஆனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சி நிகழ்வில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மயூரன் மாதுரி, ஆசிரிய ஆலோசகர் ம.யோகராஜன்  திருமதி ந.திருநாவுக்கரசு, பிரதி அதிபர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி நிகழ்வை ஆரம்பிக்க வருகை தந்த அதிதிகளை, மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனமையைத் தொடர்ந்து அதிதிகள் இணைந்து, கண்காட்சி கூடத்தைத் திறந்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X