Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 08 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள வீடமைப்பு திணைக்களத்தினால் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வீடு கட்ட வசதியற்று வாழும் 35 வறிய குடும்பங்களுக்கு வீடமைத்துக்கொள்வதற்கான முதற்கட்ட
காசோலைகள் நேற்று வெள்ளிக்கிழமை (07) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபெத்தி, கல்வி அமைச்சர் தண்டாயுதபானி விவசாய அமைச்சர் துறைராஜ சிங்கம் ஆகியோரினால் இந்தக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மூன்று கட்டங்களாக வழங்கப்படவிருக்கும் நிதியளிப்பில் முதற்கட்டமாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளே வழங்கி வைக்கப்பட்டன. இவ்வாறு பணத்தினை பெற்றுக்கொண்ட பயனாளிகள் எவ்வளவு விரைவாக வீடமைப்பு வேலைகளை ஆரம்பிக்கின்றார்களோ அவ்வளவு விரைவாக அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவான 60 ஆயிரம் ரூபாவையும் 40 ஆயிரம் ரூபாவையும் பெற்றுக்கொள்ள முடி;றும் முதலமைச்சர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து 20 குடும்பமும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 15 குடும்பமும் இந்த காசோலைகளை பெற்றுக்கொண்டனர்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 22 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago