Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக இலங்கை எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ நேற்று செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட 48 பக்கங்களுக்குக் குறையாத ஒரு நூலின் மூன்று பிரதிகள் விருது தெரிவுக்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விருது வழங்கலுக்காக நூல்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு கீழ்க்காணும் பிரிவுகளைச் சார்ந்த தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் ஏற்றுக் கொள்ளப்டவுள்ளன.
அதற்கமைய சுயநாவல், சிறுகதை, கவிதைப் படைப்பு, இளையோர் இலக்கிய படைப்பு, பாடலாக்கத் தொகுப்பு, நாடகம், அறிவியல் புனைகதை, சிறுவர் இலக்கியப் படைப்பு, புலமைத்துவ மற்றும் ஆய்வுகள் படைப்பு, நானாவித விடய நூல்கள், மொழி பெயர்ப்புத் துறையிலான சிறுகதைத் தொகுப்பு, கவிதை படைப்பு, நாடகம் மற்றும் புலமைத்துவ ஆய்வுகள் படைப்பு ஆகிய துறைகளைச் சார்ந்த நூல்களை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் 'அரச இலக்கிய விழா ஏற்பாட்டுப் பிரிவு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல' என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்க முடியும் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
36 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago