Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட வீதிகளை கொங்கிறீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸரத்தினால் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பிரதேசங்களுக்கு கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்துக்கமைய, ஒவ்வொரு வேலைத்திட்டத்துக்கும்; 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸரத் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச செயலாளர்; பிரவுக்குட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 27 மில்லயன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பொத்துவில் 27ஆம் பிரிவு றசாக் மௌலானா நகரிலுள்ள எம்.எல்.வாத்தியார் வீதியை கொங்கிறீட் இடுவதற்கான அங்குரர்ப்பண வேலைகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றதுன.
இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், கிராம நிலதாரிகள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
28 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago