Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாகக் கூட்டம் கூட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 13 மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்;வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களை விடுதலை செய்வது தொடர்பில் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்குமிடையில் நேற்றையதினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யுமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்களில் ஈடுபடுவதில்லையென்று உறுதியளிக்குமாறும் மாணவர்களிடம் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது, அத்துமீறிய மற்றுமொரு மாணவர் குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்ட மாணவர்களையும் இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago