2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வெளிநாட்டு வாழ் இலங்கைப் பிரஜைகளுக்கு அழைப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா,ஏ.ஜி.ஏ.கபூர்

இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் சுமார் 20 இலட்சம் பேர் வாக்குரிமையின்றி இருப்பது கவலைக்குரிய விடயம். இந்த ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் பெற வேண்டுமென்பதை வலியுறுத்திப் பெறுவதற்காக இலங்கைக்கு வெளியில் வாழும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் அமைப்புக்களும் ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் தெரிவித்தார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்;திப்பு  அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் எமது அரசாங்கம் கரிசனை காட்டுவதில்லை. அரசாங்கம் உங்களுக்காக செலவு செய்வதில்லை. உங்களின் தொழிலுக்கு ஏதும் நடந்து நீங்கள் நாடு திரும்பினால் என்ன செய்வதென்று  உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. இன்னொரு தொழிலை தேடி பெற்றுக்கொள்ளும்வரை உங்களுக்கு ஊதியத்தை அரசாங்கம் தருவதில்லை' என்றார்.

'புலம்பெயர் அமைப்புக்களும் தனி நபர்களும் ஒன்றுபட்டு அரசுக்கு சரியான அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் நாம் இழந்து நிற்கும் உரிமைகளை பெற வாய்ப்புள்ளது. எனவே, இதற்;காக எங்களுடன் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .