2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று -பொத்துவில் வீதியிலுள்ள கோவிலுக்கு அருகில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்; தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாச்சிக்கடாவைச் சேர்ந்த ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்த வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏழு பேர் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர்  விசேட  வீதிச் சுற்று நடவடிக்கையை மேற்கொண்டபோதே, மேற்படி சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள ஏனைய ஐந்து பேரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X