Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பொதுமக்களின் சட்டம் பற்றிய அறிவை மேம்படுத்தும் நோக்கில் அம்பாறை சட்ட உதவி ஆணைக்குழு, இலங்கை குடும்ப புனர்வாழ்வு நிலையம் மற்றும் அட்போ அமைப்புக்கள் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நாடகம் இன்று திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
நாட்டில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள்,மதுபானம்,போதைவஸ்து மற்றும் அதிகார பலம் பெற்றவர்களினால் சாதாரண மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள், இதனை வேடிக்கை பார்க்கும் சட்டம் போன்றவற்றை வெளிக்கொண்டு வந்து இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக மக்கள் போராட சட்டங்கள் தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியத்துவமான விடயம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நாடகம் அமைந்திருந்தது.
இதில்,திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் பிரதம அதிதியாகவும் அம்பாறை சட்ட உதவி ஆணைக்குழு, இலங்கை குடும்ப புனர்வாழ்வு நிலையம் மற்றும் அட்போ அமைப்புக்களின் உத்தியோகத்தர்களான சட்ட உதவி அதிகாரி ஏ.ஜே.எம். நசீர்,கிழக்கு பிராந்திய சட்ட உதவி அதிகாரி எம்.எச்.எம்.எச்.றுஸ்டி,எம்.எம்.ஏ.சுபாயிர் நிகழ்ச்சி திட்ட அதிகாரி, பி.எம்.கலாமுடீன்,இலங்கை குடும்ப புனர்வாழ்வு நிலைய கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சதிஸ்குமார், எஸ்.பாஸ்கரன், திருக்கோவில் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago