Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன், எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்ற 57 வயதுடைய விவசாயி, இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்காக குறித்தநபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணியளவில் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் இன்று காலை வரை வீடு திரும்பாததையிட்டு உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
இந்நிலையிலே, நாவிதன்வெளி 6ஆம் கொலனிப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், அக்காணியில் வேறோரு பகுதியிலிருந்து மீட்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.
33 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
1 hours ago