Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 20 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
பொத்துவிலில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நபரொருவர், நேற்று (19) கைது செய்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் பிரதான வீதியில் நின்றுகொண்டிருந்த குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போது, அவரிடமிருந்து சிறிய பக்கெட் ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் சூட்சபமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு வந்த போது, பொத்துவில் பொலிஸாரால் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானா நபர், இன்று (20) பொலிஸாரால் பொத்துவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொத்துவில் நீதிமன்ற நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .