Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,ஐ.ஏ.ஸிறாஜ்
இவ்வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி காலப்பகுதியில் மாத்திரம் அட்டாளைச்சேனையில் 33 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
'தேசிய அபாயம்'ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு எமது பங்களிப்பை வழங்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுவரும் தேசிய டெங்கு கட்டுப்பாட்ட வாரத்தையொட்டி இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கொழிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் எமது பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கொழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்கள் டெங்கொழிப்பு வலயமாக பிரிக்கப்பட்டு டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் எமது பிரதேசத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
பூச்சிகள் ஆய்வாளர்களின் அறிக்கையின்படி அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான குடம்பிகள், முட்டைகள் காணப்படுகின்றன.
எனவே எமது பிரதேசம் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாவதற்கான அபாயம் அதிகம் உள்ளது என்றார்.
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago