Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
நாட்டின் விவசாயத்துறையை மேலோங்கச் செய்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்துக்கு அதிகாரிகள் முழு மூச்சுடன் செயற்பட வேண்டும். அதிகமான அதிகாரிகள் அசமந்தப் போக்கான நிலையில் இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக விவசாய திணைக்கள அதிகாரிகள் மிகவும் கூடிதலாக உழைக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் தெரிவித்தார்.
தேசியரீதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட 'பாதுகாப்பான உணவு- நிலையான விவசாயம்' எனும் தொனிப் பொருளிலான உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்Jf;கமைய அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் பாலமுனை விவசாயக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நிலையான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு நல்ல சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும். அதற்காகவே கல்வி, சுகாதாரம், போஷாக்கு, விவாசய உற்பத்தி மற்றும் நலனுதவித் திட்டங்கள் போன்ற துறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டுள்ள இந்த உணவு உற்பத்தி திட்டத்தில் நான்கு விடயங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கின்றன.
முதலாவது உணவு உற்பத்தி, இரண்டாவது பெருந்தோட்ட அபிவிருத்தி, மூன்றாவது மிருக, கால்நடை வளர்ப்பு, நான்காவது மீன்பிடி அபிவிருத்தி என்பனவாகும், இந்த நான்கு துறைகளிலும் நாடு தன்னிறைவு அடைந்து வருகின்றது.
மேலும்,உற்பத்தியை கூட்டுவதன் மூலம் தேசிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
தேசிய உணவுத் தேவைக்காக ஒரு வருடத்துக்கு 28 இலட்சம் புசல் நெல் தேவைப்படுகின்றது. இந்நுகர்வுத் தேவைக்கான உற்பத்தி கிடைக்கின்றது. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 25 சதவீதமான உற்பத்தி கிடைக்கின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.
இவ்வாறு நாட்டுக்கான கடலுணவுத் தேவையில் கிழக்கு மாணம் மூன்றில் ஒரு பகுதியை நிவர்த்தி செய்து வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் எமக்கான வளங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் நவீன மயமாக்கலின் கீழ் எமது தொழில் துறைகள் இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் இன்னும் பாரம்பரிய முறையில் இருப்பது பாரிய குறைபாடாகும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டு வருகின்ற உற்பத்திகளை நாட்டின் நுகர்வுக்காக மட்டுமன்றி சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. இதனை மேலும் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை ஏற்படுத்தி அர்ப்பணிப்புடன் பாடுபட்டுழைக்கும் போது அதிக உற்பத்திகளையும் வருமானத்தினையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும் என்றார்.
15 minute ago
15 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
28 minute ago
39 minute ago