2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அபராத தொகையை செலுத்தாமல் தலைமறைவானவருக்கு சிறை

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் செலுத்த வேண்டிய அபராதத் தொகையைச் செலுத்தாமல் தலைமறைவாகிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கி பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீவான் எம்.ஐ. வஹாப்தீன், நேற்று  (27) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 01 வருடங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தில் வனஜீவராசி திணைக்களத்தினால் பொதுமக்கள் செல்வதற்குத் தடைசெய்யப்பட்டிருந்த பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு இவருக்ககெதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் செய்யப்பட்ட வழக்குத் தொடுக்கப்பட்டதையடுத்து நீதிமன்றினால் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இத் தொகையைச் செலுத்தாது தலைமறைவாகிருந்த நிலையில் நீதிமன்றினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பொலிஸாரால் நேற்று (27) இந்நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X